நேசிப்பாயா தோல்வி… ஆகாஷ் முரளியின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமான இளம் இயக்குனர்!
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், பில்லா புகழ் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி(அதர்வாவின் தம்பி), அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படம் ஜனவரி மாதம் ரிலீஸானது. இந்த படம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் திரையரங்குகளை விட்டு வெளியேறியது.
இந்த படத்தை மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தன்னுடைய மருகன் ஆகாஷ் முரளியைக் கதாநாயகனாக்க தயாரித்திருந்தார். அந்த படம் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் மீண்டும் ஒரு படத்தை அவரை வைத்து தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தை பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் இயக்குனர் இளன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.