பாண்டிராஜ் படத்தில் சூர்யாவுக்கு ஹீரோயின் யார் தெரியுமா?

Last Modified சனி, 21 நவம்பர் 2020 (15:47 IST)

நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் பட்த்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளது உறுதியாகிவிட்டது.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். படத்துக்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கான பின் தயாரிப்பு வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது, சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :