ரியல் "பொம்மி பேக்கரி" இது தான் - கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் பதிவு வைரல்!
நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திActoற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நவம்பர் 12ம் தேதி வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவின் மனைவியாக நடித்த நடிகை அபர்ணா பாலமுரளி பொம்மி என்ற பேக்கரி கம்பெனி ஒன்றை நடத்தி வருவார். அதே போன்று ஜி ஆர் கோபிநாத்தின் நிஜ வாழ்க்கையில் அவரது மனைவி நடத்தி வந்த பன் வேர்ல்ட் ஐய்யங்கார் பேக்கரி ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பேக்கரியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.