திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2019 (11:22 IST)

என்ன படம் ? ’கைதி ’படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !மகிழ்ச்சியில் இயக்குநர்!

சமீபத்தில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் பேராதரவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கைதி. இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ள இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வருகின்றனர். அதனால் இயகுநர் லோகேஷ் கனகராஜை பாலிவுட், டோலிவுட் , என்ற அனைத்து சினிமா நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தைப் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’கைதி...புதுமையாக படமாக்கம் ...திரில்லரான சண்டைக்காட்சிகள் , பிடிப்பான கதைக்கேற்ப அசத்தலான நடிப்பு .. பாடல் இல்லை !!  ஒரு  வரவேற்கத்தக்க மாற்றம்’ என தெரிவித்துள்ளார்.