1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:44 IST)

படப்பிடிப்பு நடைபெறும் கிராமத்தினர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் சூர்யா!

surya
சூர்யாவின் 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தர சூர்யா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சூர்யாவின் 41வது படத்தின் படப்பிடிப்பு குமரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக ஒரு சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்கவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அந்த கிராமத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்