1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (13:44 IST)

குழந்தைகள் சூழ கலகலப்பான ’ஓ மை டாக்’… எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டிரைலர்!

அருண் விஜய் மற்றும் அவரின் தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் நடித்துள்ள ஓ மை டாக் திரைபடத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அது குறித்த எந்த தகவலும் அதன் பின்னர் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் அந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அவரின் மகன் என மூன்று தலைமுறை குடும்ப நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு அரிதான வகை நாய்குட்டி சிறுவன் அர்ஜுனிடம் கிடைக்க அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் விதமாக இந்த டிரைலர் வெளியாகியுள்ளது.