1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:41 IST)

மாநாடு படத்துக்குப் பிறகு எஸ் ஜே சூர்யா படத்தில் சிம்பு…. வெளியான ’கடமையை செய்’ அப்டேட்!

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த நடிப்பில் உருவாகி வரும் கடமையை செய் படத்தின் ரிலீஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் முத்தின கத்திரிக்கா படத்தின் இயக்குனர் வெங்கட் இயக்கும் கடமையை செய் படத்தில் நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரிலீஸ் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுகிறது. சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.