வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:07 IST)

கணவரின் பிறந்த நாளில் ஹேப்பி நியூஸ் சொன்ன சூர்யா பட நடிகை!

நடிகை பிரணிதா தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில் பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது. பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் கர்பப்மாக இருப்பதை அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வித்தியாசமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.