திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:38 IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி: சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்?

surya karthi
சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இருவருமே சரியான கதை கிடைத்தால் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக பல மேடைகளில் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பிஜூ மேனன் கேரக்டரில் சூர்யா, பிரித்விராஜ் கேரக்டரில் கார்த்தி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது