திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (16:09 IST)

விஜய் லோகேஷ் படத்தில் வில்லனாக இணையவுள்ள முன்னாள் ஆக்‌ஷன் ஹீரோ!

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் மட்டும் இல்லாமல் படத்தில் வேறு சில வில்லன்களும் உள்ளதாகவும், அவற்றிலும் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

அர்ஜுன் ஏற்கனவே அஜித்தின் மங்காத்தா மற்றும் விஷாலின் இரும்புத்திரை ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.