வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (08:49 IST)

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு தேதி பற்றி வெளியான தகவல்?… ரஜினி கமலுக்கு அழைப்பு

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை இயக்குனர் மணிரத்னம் தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.