1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:44 IST)

'' இப்படம் அவசியம்'' - சூப்பர் ஸ்டார் படத்தைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

பாலிவுட்சூப்பர் ஸ்டார் அமீர்கானின் புதிய படத்தைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்தி சினிமாவில் தங்கல், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ஷாருக்கான் கவுரவ வேடத்தில்  நடித்துள்ளார்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார்.  இப்படதிதின் படத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், நடிகர் உதய நிதி, நாக சைதன்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன்.  'லால் சிங் சேத்தா' படம் அன்பு. காதல், மனித நேயம், ஆகியவற்றைப் பேசும் படமாக உள்ளது. இன்றைய காலத்தில் இப்படம் மிக அவசியான ஒன்றாகும்.  நாம் மோசமாக உணரும் தருணங்களில்  நம்மை மேம்படுத்துகின்ற படங்களில்  ஒன்றாக இப்படம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
laal singh chadda

சமீபத்தில், இப்படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி அதுவே இப்படத்திற்கு விளம்பரமானது. எனவே  இப்படம் நிச்சயம் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.