புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (12:41 IST)

சூப்பரான ‘சூர்யா 38’ பட அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட்டை இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்துள்ளார். 
 


 
சூர்யா ரசிகர்களுக்கு இந்தாண்டு முழுக்க ஒரே கொண்டாட்டம் தான். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' திரைப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கடுத்து சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் "காப்பான்" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த இரு படங்களை முடித்த பிறகு  சுதா கொங்காரா இயக்கத்தில்  சூர்யாவின் 38-வது உருவாகவுள்ளது.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
 

 
இந்நிலையில் தற்போது இதுகுறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூர்யா 38 படத்திற்கான இசை வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்திற்கான இசை குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும்.