புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (12:12 IST)

ரௌடிகளுடன் சண்டைபோடும் நடிகர் சூர்யா..!

"காப்பான்" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ..! 


 
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால்  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் காப்பான் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சூர்யா. 
 
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மலையால சூப்பர் மோகன்லால், சூர்யா, ஆர்யா , சாயிஷா சைகல், பொமன் இரானி, பிரேம் , சமுத்திரக்கனி,  உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
 
இந்த படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்திய இயக்குநர் கே.வி.ஆனந்த். அதில் 'மீட்பான்', 'காப்பான்', 'உயிர்கா' ஆகிய தலைப்புகள் இடம்பெற கடைசியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க "காப்பான்"  என்ற தலைப்பை தேர்வு செய்தனர். கையில் துப்பாக்கியுடன் உள்ள சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்தது. மேலும் காப்பான் படத்தின் பாடல் ரெகார்டிங் பணியில் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் ,  இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதியிலிருந்து துவங்கவுள்ளதாக செய்தி வெளியாகியது. படத்தில் நிறைய ஆக்ஷன் நிறைந்த சண்டை காட்சிகளை படம்பிடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்தியா மட்டுமல்லாது லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும்  இதன் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் இப்படக்குழுவினர்.