மீண்டும் வெற்றிப்பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் .! சன் பிச்சரின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (15:57 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்தும் சிறுத்தை சிவா இயக்கத்தில்  எஸ்.கே  16 படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட்  டாபிக்காக பேசப்பட்டது.


 
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார்.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவுசெய்த   சன் பிச்சர் நிறுவனம் எஸ்.கே 16 படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
 
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை வைத்து  மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#SK16BySunPictures @sivakarthikeyan @pandiraj_dir

A post shared by Sun Pictures (@sunpictures) onஇதில் மேலும் படிக்கவும் :