சூர்யாவின் காப்பான் பட இயக்குனரின் முக்கிய அறிவிப்பு

VM| Last Updated: புதன், 27 பிப்ரவரி 2019 (16:51 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' படம் விரைவில் வெளியாக உள்ளது.  


 
சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சாயீஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.  லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
 
அதில் காப்பான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது.   ஆர்யாவுடன் பணிபுரிவது மிகச் சிறந்த அனுபவம். என்றார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 
பின்னர் இதற்கு பதிலளித்த ஆர்யா, நன்றி சார். உங்களுடன்  பணிபுரிந்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.  உங்களுடைய அடுத்த படத்துக்காக என்னுடைய நம்பரை பத்திரமாக வச்சுக்கங்க . சூர்யா சார், உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்
 


இதில் மேலும் படிக்கவும் :