திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 4 ஜூலை 2020 (14:37 IST)

பஜ்ஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ஆந்தம் – சிம்புவின் அசத்தல் பாட்டு!

சிம்பு குரலில் பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் பிரண்ட்ஷிப் படம் மூலமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.