திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (09:57 IST)

லாஸ்லியாவின் முதல் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.... பெரிய எதிர்பார்ப்பில் கவிலியா ரசிகர்கள்!

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் "பிரண்ட்ஷிப்"  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவை திரையில் காண காத்திருக்கும் ரசிகர்கள் இந்த பர்ஸ்ட் லுக்கிற்காக மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அத்துடன் கவின் ரசிகர்களும் அண்ணியின் போஸ்டரை ட்ரெண்ட் செய்ய வேண்டும் என காத்திருக்கின்றனர்.