திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (08:30 IST)

மீண்டும் இந்திய அணியில் விளையாட ரெடி – இந்த வயதில் இவருக்கு இப்படி ஒரு ஆசையா?

இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தான் மீண்டும் இந்திய அணியில் விளையாட தயாராக இருப்பதாக சொல்லியுள்ளார்.

இந்திய அணியின் திறமை வாய்ந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். 100 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடி 400 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றிய அவர் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாக அவர் இணையதளம் ஒன்றுக்காக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் ‘ன்னால் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக பந்து வீச முடிகிறது. உலகின் டாப் பேட்ஸ்மேன்களை எனது பந்துவீச்சால் வீழ்த்தி உள்ளேன். அப்படியானால் ஏன் இந்திய அணிக்காக விளையாட முடியாது. இந்திய அணியில் ஆடுவது எனது கையில் இல்லை. ஒரு வேளை எனக்கு வயதாகி விட்டதாக தேர்வுக்குழுவினர் நினைக்கலாம். ஆனால் நான் இப்போதும் இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.