வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:49 IST)

கிளைமாக்ஸ் மாற்றத்தால் ஒரு அடார் லவ்க்கு சூப்பர் வரவேற்பு! எங்கு தெரியுமா?

தெலுங்கில் கச்சிதமாக கல்லா கட்டி வருகிறது ஒரு அடார் லவ் என்ற லவ்வர்ஸ் டே திரைப்படம்.


 
மலையாளத்தில் உருவான ஒரு அடார் லவ் திரைப்படம் தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. உமர் லுல்லா இயக்கிய இப்படத்தில் முகமது ரோஷன், பிரியா பிரகாஷ் வாரியார், நூரின் ஷெரீப் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்து இருந்தனர். படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதால் லவ்வர்ஸ் டே திரைப்படம் தெலுங்கில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இப்படத்தை ஆந்திராவில் வாங்கி திரையிட்ட, தயாரிப்பாளர்கள் குருராஜ் , வினோத் ரெட்டி ஆகியோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.



இதை அடுத்து லவ்வர்ஸ் டே படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் இயக்குனர் உமர் லுல்லா மற்றும் படத்தின் ஹீரோயின் நூரின் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் லவ்வர்ஸ் டே திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர்.