வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:30 IST)

அடேங்கப்பா என்ன ஆட்டம்! லட்சுமி பேபி தித்யாவின் நடனத்தை பார்த்து காலில் விழுந்த லாரன்ஸ் !

பிரபுதேவா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடனத்தை மையமாக கொண்டு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வெளிவந்து வெற்றிநடைபோட்ட படம் ‘லட்சுமி’. 


 
இப்படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க பேபி தித்யா பந்தே,  கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.  சாம் சி.எஸ். இசையோடு தித்யாவின் நடனம் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. 
 
இந்நிலையில் சமீபத்தில் பிரபல இணயத்தள தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திர விருது லட்சமி படத்தில் நடித்த பேபி தித்யாவுக்கு டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் கையால் வழங்கப்பட்டது. பிறகு அந்த மேடையில்  லாரன்சும் தித்யாவும் சேர்த்து மரண மாஸ் பாடலுக்கு நடனம் ஆடினர். தித்யாவின்  நடனத்திறமையை  மெய்மறந்து பார்த்த லாரன்ஸ் ஆச்சர்யபட்டு தித்தியாவின் காலில் விழுந்து கும்பிட்டார் 
 
இவளவு திறமை படைத்த இந்த குழந்தைக்கு உங்கள் கையால் விருது கொடுப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, இவள் கடவுள் என்று கூறி ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார் லாரன்ஸ் .