ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (15:07 IST)

விஸ்வாசம் 50 ஆவது நாளில் நடத்திய சாதனை – இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடுகிறதா ?

விஸ்வாசம் திரைப்படம் தனது 50 ஆவது நாளான இன்று மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

விஸ்வாசம் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படமான பேட்ட படத்தோடு பொங்கலுக்கு ரிலிஸானது.. பொங்கல் ரேசில் தமிழகத் தியேட்டர்களில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தைப் பின்னுக்குத் தள்ளி வசூல் மழை பொழிந்தது. மக்கள் நீண்டகாலத்திற்கு அஜித் படத்திற்குக் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். இதனால் விஸ்வாசம் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.

சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் ‘ விஸ்வாசம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். நாங்கள் தயாரித்ததிலேயே அதிக வசூல் செய்தப் படம். தமிழகத்தில் தியேட்டர்கள் மூலமாக மட்டுமே ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது.விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 70 முதல் 80 கோடி ரூபாய் வரை பங்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்ததால் இவ்வளவுப் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளது’ எனக் கூறினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் திரையரங்கங்களின் மூலம் அதிக வசூல் செய்தப் படம் என்ற சாதனையை விஸ்வாசம் நிகழ்த்தியுள்ளது என்பது ஊர்ஜிதமானது.

இதையடுத்து இன்று விஸ்வாசம் படம் தனது 50 ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. ரிலிஸாகி 50 நாட்கள் ஆகியும் அதன் பிறகுப் பல படங்கள் வெளியானாலும் இன்னமும் விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் 125 தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபகாலங்களில் வந்த எந்தவொரு தமிழ்ப்படமும் இத்தகைய சாதக்னையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை விஸ்வாசம் படக்குழு அதிகாரப்புர்வமாக வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.