வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (13:41 IST)

முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடமா ? – படக்குழு முக்கிய அறிவிப்பு !

விரைவில் தொடங்க இருக்கும் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் படத்தை பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வரிசையாக இப்போது குறுகியக் காலங்களில் அவரது படங்கள் ரிலிஸ் ஆகி வருகின்றன. பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து அவர் இப்போது முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருந்தாலும் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக இல்லை. அதற்கு முக்கியக் காரணம் இதுவரையில் இந்தப் படத்தை யார் தயாரிப்பது என்பதே உறுதியாகவில்லை என்பதுதான். இப்போது படத்தை யார் தயாரிப்பது என்பது உறுதியாகியுள்ளது. ரஜினியை வைத்து 2.0 எனும் பிரம்மாண்டப் படைப்பைத் தயாரித்த லைகா நிறுவனமே ரஜினியின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

மேலும் இன்னொரு முக்கியமான மறுப்பு செய்தியும் படக்குழ் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. ரஜினி இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் என இருவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்துள்ள படக்குழு ரஜினி ஒரே கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதாகக் கூறியுள்ளது.

மார்ச் மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.