வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:14 IST)

பிரியா வாரியரின் கனவு நாயகன் – துல்கர் ? பஹத் பாசில் ? டேவினோ தாமஸ் ?

ஒரு அடார் லவ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள மலையாளக் கதாநாயகி பிரியா வாரியார் தனது கனவு நாயகன் குறித்தப் பதிலொன்றை அளித்துள்ளார்.

மலையாளத்தில் ஹிட்டடித்த ஒரு அடார் லவ் படம் நேற்று தமிழகத்தில் வெளியானது. இப்படத்தின் கதாநாயகி பிரியா வாரியர் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவும் பிரபல்யம் மிக்கவர். அதற்குக் காரணம் ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒருப் பாடலில் கதாநாயகன் ரோஷனைப் பார்த்துக் கண்ணடித்தும் துப்பாக்கியால் சுடுவது போல நடித்துக் காட்டியும் தனது அழகான முகபாவத்தால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தார்.

அந்த ஒருப் பாடலின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் ஒரு படத்தில் நடிக்கும் அளவுக்கு புகழ்பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கும் ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகனாக நடித்த ரோஷனுக்கும் இடையில் காதல் ஓடிக்கொண்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பிரியா வாரியர் ‘தனது கனவு நாயகன் துல்கர் சல்மான் போன்று உடல் அமைப்பும், பகத் ஃபாஸிலின் புன்னகையும், டோவினோ தாமஸின் முடி அழகும் கலந்து என் கனவு நாயகன் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்து வரும் பிரியா வாரியரின் கனவு நாயகனாக யார் வரப்போகிறார்களோ என ரசிகர்கள் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர்.