செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (18:53 IST)

''வலிமை'' படத்தின் சூப்பர் அப்டேட்....ரசிகர்கள் மகிழ்ச்சி

‘’வலிமை’’ படத்தின் முதல் ரிவியூ வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்துள்ள படம் ‘வலிமை.’

இத்திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டரில் அறிவித்தார். எனவே இப்படத்தின் ரிலீஸ்  நாளுக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி, தெலுங்கு டிரைலர் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், சமீபத்தில், வலிமை படத்தை ராசன் வாசனி என்பவர் பார்த்து விமர்சனம் பதிவிட்டுள்ளார். அதில், பான் இந்தியா படமான வலிமை படத்தை   நேற்று பான் இந்தியா குழு மற்றும் ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பார்த்தேன். ஃபாஸ்ட் அன்ட் ஃபூரியஸ் மற்றும் மிசன் இம்பாசிபில் போன்ற படங்களைப் போன்று  இப்படம் தியேட்டர்களில் பார்க்க விருந்தாக இருக்கும் எனவும், திரிலிங்காக இருக்கும் எனவும் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.