செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:22 IST)

‘’வலிமை’’ பட டிரெயிலரை ரிலீஸ் செய்வது யார் தெரியுமா?

நடிகர் அஜித்-நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பட டிரைலரை தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில்  ரீலீஸ் செய்பவர்களைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரைலர் இன்று மாலை 6;30  ரிலீஸாகும்  என அதிகாரப்பூர்வமாக ஜீ ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

மேலும், வலிமை பட டிரைலரை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த டிரெயிலர் நிச்சயம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்,  ‘வலிமை’ பட தமிழ் டிரெயிலரை சோனி      ‘மியூசிக் சவுத் ரிலீஸ் ‘செய்கிறது. ‘வலிமை’ பட தெலுங்கு டிரெயிலரை ‘நடிகர் கார்த்திகேயா ‘ரிலீஸ் செய்கிறார். அதேபோல்,  ‘வலிமை’ பட இந்தி டிரெயிலரை  ஜீ’ ஸ்டுடியோஸ்   ‘ரிலீஸ் செய்கிறது.

இந்த வீடியோ லிங்குகள் அனைத்தையும்’ வலிமை’ பட தயாரிப்பாளர் ‘போனிபூகர்’  ஷேர் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.