1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (21:15 IST)

'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்

'வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் இதனை அடுத்து இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் திரை அரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் போனிகபூர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இ ந்  நிலையில் வலிமை படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசியர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதியை திருவிழாவாகக் கொண்டாடவுள்ளனர்.  இதுகுறித்து அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் வலிமை ரிலீஸ் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.