செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:41 IST)

அமேதியில் ஸ்மிருதி ராணி வேட்புமனுத்தாக்கல் – ராகுலை சமாளிப்பாரா ?

அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட இருக்கும் பாஜகவின் ஸ்மிருதி ராணி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

ராகுல் தான் போட்டியிடும் வயநாடு மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் முறையே ஏப்ரல் 4 மற்றும் 10 ஆகிய தேதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். ராகுலின் செல்வாக்கு மிக்க அமேதி தொகுதியி ராகுலை தோற்கடிக்க பாஜக ஸ்மிருதி ராணியை அத்தொகுதியில் நிறுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று ஸ்மிருதி ராணி இன்று அமேதி தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக இரண்டு தொகுதிகளில் ராகுல் நிற்பத்உ குறித்து ‘கடந்த 15 ஆண்டுகளாக அவரை வெற்றி பெற வைத்த மக்களை இழிவுபடுத்திவிட்டு ராகுல் வயநாட்டுக்கு மனுத்தாக்கலுக்கு சென்று விட்டார்.  அமேதி மக்கள் இந்த துரோகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கூறினார்.