அவர் எனக்குச் சிறந்த தோழி - ராகுல் காந்தி ’ஓபன் டாக்’

rakul
Last Modified சனி, 6 ஏப்ரல் 2019 (16:48 IST)
அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலுக்கு தீயாக பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தன் சகோதரி பிரியங்கா காந்தி தனக்குச் சிறந்த தோழி என்று கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள மாணவர்களுடன் ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
 
அப்போது மாணவர்கள் பிரியங்கா காந்தி பற்றி கேள்விகள் எழுப்பினர். அதற்கும் அவர் பதிலளித்தார்.
 
அவர் கூறியதாவது:
 
பயங்கரவாத வன்முறையால் எனது குடும்பம் பலமுறை பாதிக்கப்பட்டது. எனது பாட்டி இந்திராகாந்தி,  தந்தை ராஜிவ் காந்தி ஆகியோர் பயங்கரவாத வன்முறைக்குப் பலியாகினர்.
என் சகோதரி பிரியங்கா எனக்குச் சகோதரி மட்டும் அல்ல சிறந்த தோழியாகவும் இருக்கிறார் என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :