வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (15:08 IST)

ஆந்திராவுக்குப் போனா ‘இது ஒங்க படம்’… இங்க வந்தா ‘வெற்றிவேல் வீரவேல்’ஆ… சுஹாசினியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிக வெற்றிகரமாக ஓடி வருகிறது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி “பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பு 10 நாட்கள்தான் தமிழகத்தில் நடைபெற்றது. மீத படப்பிடிப்புகள் முழுவதும் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும்தான் நடைபெற்றது. பொன்னியின் செல்வன் உங்கள் படம். இதை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் படக்குழுவினர் அனைவரும் இணைந்து சென்னையில் படம் பார்த்தனர். அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோவில் “அனைவரும் வெற்றிவேல் வீரவேல்” என கோஷமிட்டனர். இதில் சுஹாசினியும் அவ்வாறு கோஷமிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் சுஹாசினி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெளிமாநிலங்களுக்கு சென்றால் “பொன்னியின் செல்வன் உங்களின் படம் என்று பேசுவது. இங்கு ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கமா என சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.