1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified புதன், 5 அக்டோபர் 2022 (09:33 IST)

பொன்னியின் செல்வன் பார்த்து ஜெயம் ரவியைப் பாராட்டிய ரஜினி! வைரல் ட்வீட்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த வாரம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியைப் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட ட்வீட்டில் “ரஜினி சாருடனான அந்த ஒரு நிமிட உரையாடல் என் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது. நன்றி தலைவா. உங்களின் பாராட்டுக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும். உங்களுக்கு படமும் என்னுடைய நடிப்பும் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.