திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (13:01 IST)

ஜாதிக்கட்சியினர் மணிரத்னத்தை சிறுமை செய்கிறார்கள்! – இயக்குனர் சீனுராமசாமி ஆதங்கம்!

Maniratnam
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் மீது ஏற்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கடந்த வாரம் வெளியான இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அதேசமயம் படத்தின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுடனான ஓப்பீடுகளை தவிர்த்து, சோழ மன்னர்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இந்த விவகாரத்தில் மணிரத்னத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பல்வேறு கருத்துகளை பேசி வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி “எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர்.

தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார் பம்பாய் ரோஜா கண்ணத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர் ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edited By: Prasanth.K