திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (21:14 IST)

விண்ணை தாண்டி வருவாயா 2': மீண்டும் இணையும் ஏ.ஆர்.ஆர்-சிம்பு-கவுதம்மேனன்

சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது 'விண்ணை தாண்டி வருவாயா' படம் தான். இந்த படம் வெளிவந்த 2010ஆம் ஆண்டில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி பெயரை வைத்ததாக கூறுவதுண்டு. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த '96; படத்தின் ஜானு கேரக்டருடன் ஜெஸ்ஸி கேரக்டரை இணைத்து பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 'விண்ணை தாண்டி வருவாயா 2' படம் எப்போது தொடங்கும் என கடந்த சில ஆண்டுகளாக சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஆம், மீண்டும் ஒரு புதிய படத்தில் சிம்பு, கவுதம்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா 2' படம்தான் என்பது மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா 2' படமாகத்தான் இருக்கும் என
சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது


மேலும் இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் பிரமாண்டமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.