புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:31 IST)

தொழிலில் போட்டி இருக்கட்டும், நிஜத்தில் வேண்டாம்: தனுஷுக்கு சிம்பு வாழ்த்து

நம் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் நிஜத்தில் போட்டி வேண்டாம் என்று கூறி தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் வெற்றி பெற சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிம்பு படம் வெளியாகும்போது தனுஷ் வாழ்த்து தெரிவிப்பதும், தனுஷ் படம் வெளியாகும்போது சிம்பு வாழ்த்து தெரிவிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அதிகாலை காட்சி ஆரம்பமாகிவிட்டதை அடுத்து இப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு மேலும் தனது வாழ்த்து செய்தியில் கூறியபோது, நீங்கள் நடித்த வடசென்னை' திரைப்படம்  வெற்றி அடைய எனது குடும்பத்தினர், ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். 'நம் இருவருக்கும் இடையே தொழிலில் போட்டி இருந்தாலும் நிஜத்திலும், வாழ்க்கையிலும் போட்டி இல்லை. எனது ரசிகர்கள் 'வடசென்னை' திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார்.