திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (21:16 IST)

ஐஸ்வர்யா, யாஷிகா தோள்களில் கைபோட்ட சிம்பு

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே சிம்புவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளதாக சென்றாயன் கூறியதும் துள்ளி குதித்தவர் ஐஸ்வர்யா. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தற்போது சிம்புவை ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.

'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடந்த இந்த சந்திப்பின்போது யாஷிகா, ஐஸ்வர்யா இருவரின் தோள்களிலும் சிம்பு கைபோட்ட வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர், மற்றும் வாட்ஸ் அப் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குமே வாய்ப்பு கொடுக்க சிம்பு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.