திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (20:14 IST)

தனுஷை வாழ்த்தி சிம்பு வெளியிட்ட அறிக்கையை கவனிச்சீங்களா

திரையில் தனுஷுடன் போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் 'வடசென்னை'. இப்படத்தை வெற்றிமாறன் தொடங்கும் போது, சிம்புவே நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷ் நடித்தார். இந்த படம் இன்று வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் வடசென்னை படத்தை வாழ்த்தி சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
அன்புக்குரிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் 'வடசென்னை' படக்குழுவுக்கு என் சார்பாகவும் மற்றும் என் குடும்பம், ரசிகர்கள் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். திரையில் எங்களுடைய போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. என் ரசிகர்களும், என்னைப் பின்தொடர்பவர்களும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். 'வடசென்னை' வெற்றிப்படமாக அமையும்.
 
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார். சிம்பு, தனுஷ் ரசிகர்கள் சண்டை போடுவதுக்க முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சிம்புவின் அறிக்கை வெளியாகி உள்ளது. சிம்பு வெளியிட்டுள்ள வாழ்த்துக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.