ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (15:48 IST)

பொன்னியின் செல்வன் பேய் ஓட்டம்… ராஜமௌலி பகிர்ந்த வீடியோவால் சர்ச்சை!

பொன்னியின் செலவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஆந்திராவிலும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “RRR படம் அமெரிக்காவில் திரையிட்ட போது அதற்கு கிடைத்த வரவேற்பை” வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

படம் ரிலீஸாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஏன் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் குழம்பினர். மேலும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் வெற்றியை பொறுக்காமல்தான் அவர் அந்த வீடியோவை வெளியிட்டார் என்றும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.