திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (07:45 IST)

நான் மிகவும் ஹேப்பி - ஸ்ருதிஹாசனின் பதிவால் கடும் சர்ச்சை

கலைஞர் கருணாநிதியின் மரணத்தால் நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் இருக்கும் வேளையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர்களுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக இருக்கிரது என ஒரு பதிவை போட்டுள்ளார். இதனைப் பார்த்த பலர், ஒரு மாமனிதர் இறந்திருக்கும் வேளையில் அவர் இப்படி பொறுப்பற்று நடந்துகொள்வதால் ஸ்ருதிஹாசனை பலர் திட்டி வருகின்றனர்.