அரசியல் ஒன்றும் இரண்டரை மணிநேரப் படம் கிடையாது; பிரபல நடிகை பேச்சு

Last Updated: சனி, 4 ஆகஸ்ட் 2018 (11:28 IST)
நடிகை பிரியா பவானி ஷங்கர் ரஜினி கமல் அரசியல் குறித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவருமே அரசியல் பயணத்தை துவங்கி விட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல்  காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். சீரியலையும் விட்டு விலகிய பிரியா, வைபவ்  ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.  
 
சமீபத்தில் இவர் நடித்திருந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்துள்ள  பிரியா, நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ  வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். 
 
நாம் எல்லோருமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தேலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும். ரஜினி  கமல் அரசியல் பற்றி சொல்வதென்றால், அவர்கள் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் இப்போதுதான் கட்சிப் பெயரை அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள்  தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யப்போகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன்  எனக் கூறினார். 
 
நான் ரஜினி, கமல் படம் ரிலீஸ் ஆனால், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன். படம் வேறு அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை எனவும்  தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :