நான் மரணத்தை வென்றவன் - அப்போதே கூறிய கருணாநிதி

Last Updated: செவ்வாய், 31 ஜூலை 2018 (16:54 IST)
திமுக தலைவர் கருணாநிதி தனது மரணம் பற்றி தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக உடல் நலமின்றி சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கையசைவை காண பல தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் அவரை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.   இந்த சூழ்நிலையில், கருணாநிதி பற்றிய பல செய்திகளும், பல தகவல்களும் வெளியாகின்றன. 
 
தன்னுடைய மரணம் பற்றி கருணாநிதி ஏற்கனவே தெரிவித்துள்ள செய்தியாவது:
 
மரணம் ஒருநாள் என்னை சூழும் அதை நான் ஏற்பேன்.. ஆனால் நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியினாலும் மத வெறியினாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன். ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு, அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்…
 
நீங்கள் ஒருமுறை இறப்பிற்காக பயப்படுபவர்கள். ஆனால் நானோ அதிக முறை கொல்லப்பட்டவன். சூழ்ச்சிகளாலும் நயவஞ்சகத்தாலும் என் உடல் மட்டுமே மரணத்தை காணவில்லை, ஆனால் எனது உயிர் பல முறை மரணித்து உயர்ப்பித்துள்ளது!!!
 
எனக்கு மலர் வளையம் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலருக்கும் நான் இரங்கற்பா எழுதிய போதும் அதை எனக்கும் உரியதாகவே நினைத்து எழுதியவன்.,
 
அஞ்சிடேன் நான் மரணத்தை கண்டு.. அந்த மரணத்திடம் போய் சொல்.. என்னை கண்டு அஞ்ச வேண்டாம் என்று.. ஏனென்றால் நான் அந்த மரணத்தையே வென்றவன்…!!
 
என அவர் கூறியுள்ளார். இந்த பதிவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :