சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவார் கருணாநிதி - தமிழிசை நம்பிக்கை

dmk
Last Modified செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (07:10 IST)
உடல் நலப் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் திமுக தலைவர் திமுக கருணாநிதி மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
உடல் நலக்குறைவால் கடந்த 27-ந் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறார்.
 
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்பு ஒத்துழைக்கவில்லை என்றும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பை பொறுத்தே கூற முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதால் தமிழகமெங்கும் பரபரப்பு நிலவியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து எழுந்து வா தலைவா என கோஷமிட்டு வருகின்றனர்.
police
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன், மருத்துவமனை அறிக்கை மனவருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ அறிக்கை முக்கிய உறுப்புகளைச் செயல்பட வைப்பதே சவாலாக இருப்பதாகச் சொல்கிறது . பற்பல சவால்களைக் எதிர்கொண்டவர் கருணாநிதி. அதேபோல் இந்த மருத்துவ சவால்களையும் எதிர்கொண்டு அவர் மீண்டு வருவார் என எனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :