”சரியான ஆம்பளையா இருந்தா விஷாலை பண்ண சொல்லுங்க பார்க்கலாம்”…..விஷாலை மோசமான வார்த்தைகளால் திட்டிய ஸ்ரீரெட்டி

Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (14:34 IST)
கடந்த வருடம் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி, சர்ச்சைகளை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர் விஷாலை, மோசமான வார்த்தைகளால் திட்டி வருகிறார்.

தெலுங்கு சினிமா நடிகையான ஸ்ரீரெட்டி, சென்ற வருடம், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை சரமாரியாக வைத்தார்.

மேலும் சினிமாத் துறையில் நடிகர்களுக்கு உள்ளாகும் பாலியல் தொந்தரவு குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொது வெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில், வரவிருக்கிற நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் பல பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அவர்களை படுக்கைக்கு அழைக்கிறார் என்றும், அவர் ஒரு ஏமாற்றுவாதி, அவருக்கு யாரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என்றும், நடிகை ஸ்ரீரெட்டி சரமாரியான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் நடிகர் விஷாலை மேலும் பல மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளது பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

”விஷால் தைரியமான ஆம்பளையாக இருந்தால், தான் எந்த பெண்ணையும் இது வரை ஏமாற்றவில்லை என்று கூறசொல்லுங்கள் பார்க்கலாம்” என்று தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் நம்மால் காது குடுத்து கேட்கவே முடியாத பல மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டியுள்ளார்.

தான் சினிமாவில் நடிக்க விரும்பும் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறேன் என்றும் அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தன்னை நல்லவர் போல் காட்டிகொள்ளும் ஸ்ரீரெட்டி, இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருவது பெரும் முரணாக இருக்கிறது.


 இதில் மேலும் படிக்கவும் :