திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (14:13 IST)

கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி: பதிலளித்த சிம்பு

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் செய்தார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என்று ஸ்ரீரெட்டி பதில்  அளித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.
 
அதற்கு பதில் அளித்த சிம்பு, "ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு" என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு, பெண்கள் அதிகாரம்  பற்றி பேசினார். அப்போது ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாகத்தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது.  அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம். அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும்.
 
ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக  இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள். மேலும் பேசுகையில், பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள  பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.
 
இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி, ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். ‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப்போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்.’ இவ்வாறு ஸ்ரீரெட்டி அதில் கூறியிருக்கிறார்.