திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 11 ஆகஸ்ட் 2018 (11:53 IST)

மார்க் இட் செப்.28: செக்கச்சிவந்த வானம் ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாகிய வெளியாகிய காற்று வெளியிடை படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் செக்கச்சிவந்த வானம். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. 
 
அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.