ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:27 IST)

6 விக்கெட்களை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்கா…கலக்கும் இந்திய பவுலர்கள்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ஷிகார் தவான் பந்துவீச முடிவு செய்தார்.


இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய பவுலர்களின் தாக்குதல்  பேரிடியாக அமைந்தது. தற்போது 20 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில் 6 விக்கெட்களை இழந்து 73 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர், மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷபாஸ் அகமது மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.