“என் அப்பாவின் பயோபிக்கைக் கண்டிப்பாக எடுப்பேன்..” – நடிகர் சூரி ஆசை!
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடித்துள்ள கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார்.. இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடந்த வாரம் இந்த படம் ரிலீஸ் ஆனது.
முதல் நாளில் பெரிய கூட்டம் இல்லாமல் இருந்த கருடன் திரைப்படம் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்த பின்னர் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துள்ளது. இதன் மூலம் ஒரு ஹீரோவாக சூரி ரசிகர்களை திருப்திபடுத்திவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சூரி “கண்டிப்பாக ஒருநாள் நான் என்னுடைய அப்பாவின் பயோபிக் படத்தை எடுப்பேன். அவரால் நாங்கள் நிறைய சொத்துகளை இழந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். கருடன் படத்தின் கதையே சூரி சொன்ன ஒரு ஐடியாவில் இருந்துதான் உருவானது என்று இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.