பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் கருடன்… ஹீரோவாக ஜெயித்த சூரி!
விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடித்துள்ள கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
விடுதலை படம் சூரிக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருந்தாலும், அது வெற்றிமாறனின் படமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கருடன் படத்தின் வெற்றி சூரியை மக்கள் ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையேக் காட்டுகிறது.