செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (08:13 IST)

கருடன் படத்தின் கதை வெற்றிமாறனுடையது இல்லை… இயக்குனர் துரை செந்தில்குமார் பகிர்ந்த தகவல்!

விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களை முடித்த சூரி அடுத்து நடித்துள்ள கருடன் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படத்தில் சூரியுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில்  மே 31 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
 
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்நிலையில் இன்று படம் வெளியாகும் நிலையில் படத்தின் இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
 
அதில் “இந்த படத்தின் கதை இயக்குனர் வெற்றிமாறனுடையது இல்லை. சூரி சொன்ன ஒரு ஐடியாவை வைத்துதன இந்த படத்துக்கான கதையை உருவாக்கினேன்.” எனக் கூறியுள்ளார். இத்தனை நாட்களாக கருடன் படக் கதை வெற்றிமாறனுடையது என படக்குழுவினர் விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.