வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (07:49 IST)

கன்னியாகுமரி காவி உடை.. சூரிய தரிசன வழிபாடு செய்தார் பிரதமர் மோடி..!

pm modi1
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் மோடி சூரிய தரிசன வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது என்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய இருப்பதை அடுத்து கன்னியாகுமரி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக குமரி கடல் கடலோர காவல் படையின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் படகு போக்குவரத்து கழகத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் விவேகானந்தர் மண்டபம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றும் இன்றும் தியானம் செய்யும் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க கட்சியினர் யாரும் வரக்கூடாது என்றும் கன்னியாகுமரியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மட்டும் காவல்துறைக்கு வழிகாட்டலாம் என்றும் பாஜக தலைமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva