வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (17:42 IST)

சூரியின் ’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி இதுதான்: தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு..!

சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி மற்றும் அன்னபென் நடிப்பில் கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜ் என்பவர் இயக்கத்தில் உருவான ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

’விடுதலை 2’ மற்றும் ’கருடன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து சூரி நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை அடுத்து இந்த படத்திற்கு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படம் இரண்டு சர்வதேச விருது வழங்கும் விழாவில் திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இதனால் இந்த படம் கருடன் போலவே நல்ல வசூலையும் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran